மனிதர்களில் இரண்டே விதம் தான். ஒன்று மாட்டிக் கொண்டவர்கள். மற்றொன்று இதுவரை மாட்டாமல் தவறு செய்து கொண்டிருப்பவர்கள்…
:
மாட்டிக்கொண்டவன் கெட்டவனாக சித்தரிக்கப்படுகிறான்.. மாட்டாமல் தவறு செய்பவன் நல்லவனாக அலங்கரிக்கப்படுகிறான்….
:
இதில் என்ன கொடுமை என்றால், மாட்டாமல் தவறு செய்பவன் மாட்டிக் கொண்டவனை குற்றம் சொல்லித் திரிவது தான் இங்கு பெரும்பாலும் நடைபெறுகிறது…..
:
தன் தவறுகளை மறைத்து, பிறர் செய்த தவறுகளை குறையாக சொல்லி, அதை தனக்குத் தெரிந்த அத்தனை மனிதர்களிடமும் சொல்லி தான் ஏதோ உத்தமன் போல நடந்து கொள்கிறார்கள்
உண்மையில் நல்லது கெட்டது என்று எப்படி வரையறுக்கப்படுகிறது… அவரவர் மனநிலையை பொறுத்து வரையறுக்கப்படுகிறது….